செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Published On 2021-03-04 10:03 GMT   |   Update On 2021-03-04 10:03 GMT
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை: 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி  நீதிபதி சத்தியநாராயணா  தனது உத்தரவில் குறிப்பிட்டார். 

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டுள்ளார். 

இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3-வது நீதிபதி விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Tags:    

Similar News