செய்திகள்
கைது

மதுரை அருகே பிரபல ரவுடி கைது

Published On 2021-03-03 08:04 GMT   |   Update On 2021-03-03 08:04 GMT
மதுரை அருகே பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை சிட்டம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒத்தக்கடை திருவாதவூர் சாலை அழகத்தப்பட்டி சந்திப்பு அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த புதுத்தாமரைப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் (35) அவரை தாக்கி பணம் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சதீஷ் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News