செய்திகள்
மெட்ரோ ரெயில்

கடந்த மாதம் மட்டும் மெட்ரோ ரெயிலில் 20½ லட்சம் பேர் பயணம்

Published On 2021-03-02 19:18 GMT   |   Update On 2021-03-02 19:18 GMT
ரெயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில் கடந்த மாதம் மட்டும் 20 லட்சத்து 54 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து உள்ளனர்.
சென்னை:

சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வந்தது. இந்தநிலையில் முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் சேவை நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதியில் இருந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி வரை 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் விரிவாக்கப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில் கடந்த மாதம் மட்டும் 20 லட்சத்து 54 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். கியூஆர் குறியீடு பயணச்சீட்டுக்கு 20 சதவீதமும், பயண அட்டைக்கு 10 சதவீதமும் கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. தற்போது பயண அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News