செய்திகள்
டிஜிபி ராஜேஷ் தாஸ்

ராஜேஷ் தாஸ் வழக்கு- விசாரணை அதிகாரி நியமனம்

Published On 2021-03-01 06:17 GMT   |   Update On 2021-03-01 06:19 GMT
சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழக சிறப்பு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசு, ராஜேஷ்தாசை டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் புகார் கூறினால் அது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு காரணங்களை இந்த விசாகா கமிட்டி திரட்டி வருகிறது.

இந்த நிலையில் ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. திரிபாதி பிறப்பித்துள்ளார். விரைவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்க உள்ளது.

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது.

இந்நிலையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News