செய்திகள்
முக ஸ்டாலின் - கமல்ஹாசன்

மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2021-03-01 04:27 GMT   |   Update On 2021-03-01 04:27 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது.

விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை.

கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News