செய்திகள்
திமுக உத்தேச பட்டியல்

கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள்: 178 தொகுதிகளில் போட்டியிட திமுக வியூகம்

Published On 2021-02-28 10:57 GMT   |   Update On 2021-02-28 10:57 GMT
கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை கொடுத்துவிட்டு, 178 இடங்களில் போட்டியிடும் வகையில் திமுக வியூகம் வகுத்து வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ளன.  வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய உடனே, பா.ம.க.வுடனான தொகுதி பங்கீட்டை அதிமுக முடித்துவிட்டது. அக்கட்சிக்கு 23 தொதிகளை ஒதுக்கிவிட்டது.

பா.ஜனதாவுக்கு 18 முதல் 20 தொகுகள் வரையிலும், தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள், த.மா.கா. கட்சிக்கு 4 முதல் 7 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால் தேமுதிக, த.மா.கா. கூடுதல் இடங்களை கேட்கிறது. என்றாலும் அதிக 180 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் வியூகம் அமைத்து வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க. கட்சிகள் உள்ளன.

அதிமுக 180 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதுபோல், திமுகவும் சுமார் 175 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக-வுக்கு தலா ஐந்து தொதிகளும், இ.யூ.மு.லீக், மனித நேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. ஆகியவற்றிற்கு தலா 2 தொகுதிகளும், தமிழக வழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடங்களும் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைத்தவிர மற்ற கட்சிகளை திமுக சரிகட்டிவிடும். காங்கிரஸ் 25 தொகுதிகளை ஏற்றுக் கொண்டால் சுமார் 56 தெகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 178 தொகுதிகளில் போட்டியிட திமுக வியூகம் அமைத்துள்ளது.
Tags:    

Similar News