செய்திகள்
ராகுல் காந்தி

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்? -ராகுல் கேள்வி

Published On 2021-02-28 10:15 GMT   |   Update On 2021-02-28 10:15 GMT
ஒரே நாடு, ஒரே மொழி என சொல்லும் பிரதமர் மோடி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பேசாதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
பாவூர்சத்திரம்:

தமிழகத்தில் 3-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். 

பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் அங்கு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், காமராஜர் இருந்தபோது இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழகம் இருந்ததோ, அதேபோல தற்போதும் இருக்கிறது என்றார். 

வரும் தேர்தலில் வெற்றி பெற்று வரும் அரசு மக்களுக்கான அரசாக இருக்கும், தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

அத்துடன் வழக்கம்போல் பிரதமர் மோடியையும் விமர்சித்தார்.  ‘ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரலாறு என இந்தியாவை மாற்ற முயற்சிக்கிறார் மோடி. ஒரே நாடு, ஒரே மொழி என சொல்லும் மோடி பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பேசாதது ஏன்?  இந்திய இளைஞர்களின் நேரத்தை மோடி வீணடித்துக்கொண்டிருக்கிறார்’ என ராகுல் பேசினார்.
Tags:    

Similar News