செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Published On 2021-02-28 07:04 GMT   |   Update On 2021-02-28 07:04 GMT
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 113 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய தொற்றுகளில் 86.37 சதவீதம், தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் பதிவாகி உள்ளது. 



எனவே, இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல் புதிதாக குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 84 சதவீதம் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பதிவாகி உள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு உயர்மட்டக் குழுக்களை அனுப்பியிருப்பதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.
Tags:    

Similar News