செய்திகள்
கோப்புப்படம்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள்- புதிய தகவல்

Published On 2021-02-28 05:29 GMT   |   Update On 2021-02-28 05:29 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது. மேலும் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 21 தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News