செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்

Published On 2021-02-28 04:01 GMT   |   Update On 2021-02-28 04:01 GMT
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை:

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags:    

Similar News