செய்திகள்
அமித்ஷா

அமித்ஷாவுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

Published On 2021-02-28 03:39 GMT   |   Update On 2021-02-28 03:39 GMT
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆலோசனைக்குப் பின், ஹெலிகாப்டரில் காரைக்காலுக்கு புறப்பட்டு செல்லும் அமித்ஷா அங்கு நடைபெறும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகை தரும் அமித்ஷா, மாநில மையக்குழு கூட்டத்திலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். பின்னர் 8 மணிக்கு மீண்டும் சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News