செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

தேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

Published On 2021-02-27 16:35 GMT   |   Update On 2021-02-27 16:35 GMT
தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
சென்னை: 

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக - பாமக இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
Tags:    

Similar News