செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- அப்பாவுடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி ராமதாஸ்

Published On 2021-02-26 12:29 GMT   |   Update On 2021-02-26 12:29 GMT
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்த அன்புமணி ராமதாஸ் தனது தந்தை ராமதாசை போனில் தொடர்புக் கொண்டு கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
சென்னை:

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்து, தனது தந்தை ராமதாசை போனில் தொடர்புக்கொண்டு கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.
Tags:    

Similar News