செய்திகள்
நெல்

தரமான நெல் விதைகள் பெறுவது எப்படி?- வேளாண் அலுவலர் விளக்கம்

Published On 2021-02-26 03:33 GMT   |   Update On 2021-02-26 03:33 GMT
தரமான நெல் விதைகள் பெறுவது எப்படி? என்பது குறித்து வேளாண் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நெற்பயிர்கள் விரைவில் அறுவடைக்கு தயாராக உள்ளன. நாம் தரமான விதைகளை அறுவடை செய்து, நன்கு சுத்தம் செய்து அதன் தரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். விதை குவியல்களை நன்கு காயவைத்து, நெல் விதைக்கு தேவையான 13 சதவீதம் ஈரப்பதத்துடன் காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மையை தெரிந்துகொள்ள 50 கிராம் நெல் விதைகளை தங்கள் முகவரியுடன் நாகர்கோவில் புன்னைநகர் திருபாப்பு லேஅவுட் தெருவில் அமைந்துள்ள கன்னியாகுமரி விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்கு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். மேலும், ஈரப்பதத்தை அறிந்துகொள்ள நெல் விதையை 50 கிராம் தனியாக ஒரு பாலித்தீன் கவரில் வைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

நாம் இவ்வாறு ஈரப்பதத்தை அறிந்துகொள்வதால் பூச்சி நோய் தாக்குதல் எதுவுமின்றி தரமான விதையினை பெற ஏதுவாக இருக்கும். இவ்வாறு பரிசோதனை செய்து தரமான விதைகளை சேமித்து வைக்கலாம்.

இந்த தகவலை குமரி மாவட்ட மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News