செய்திகள்
முக ஸ்டாலின்

முக ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ம் தேதி திமுக பொதுக்குழு

Published On 2021-02-25 19:23 GMT   |   Update On 2021-02-25 19:23 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ம் தேதி காலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்படுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News