செய்திகள்
கொள்ளை

கோவையில் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் அம்மன் சிலை, நகை கொள்ளை

Published On 2021-02-25 10:51 GMT   |   Update On 2021-02-25 10:54 GMT
கோவையில் நள்ளிரவில் மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐம்பொன் சிலை, மற்றும் நகையை மர்ம நபர் கொள்ளயைடித்து சென்றார்.
கோவை:

கோவை சித்தாபுதூர் ஜவஹர் நகரில் கருவலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு கோவிலின் கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 1 அடி உயரமுள்ள ஜம்பொன் அம்மன் சிலை, ¼ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 பட்டு சேலை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

இன்று காலை கோவிலை திறக்க சென்ற பூசாரி கோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அம்மன் சிலை, நகை, சேலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது மர்மநபர் ஒருவர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து போலீசார் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, நகை மற்றும் சேலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News