செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

Published On 2021-02-25 06:14 GMT   |   Update On 2021-02-25 06:14 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,144-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்தது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.35,304-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்கப்படு கிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,393-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.75 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கு விற்கிறது.
Tags:    

Similar News