செய்திகள்
தமிழக அரசு

கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து வந்தால் 7 நாள் தனிமை கட்டாயம்- தமிழக அரசு

Published On 2021-02-25 03:31 GMT   |   Update On 2021-02-25 03:31 GMT
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனாவுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும்.

* சோதனையில் பாசிடிங் என வந்தால் மருத்துவமனை, கோவிட் கேட் மையங்களில் தங்க வைக்கப்படுவர்.

* சோதனையில் நெகடிங் வந்து அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர்.

* வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும்முன் கொரோனா சோதனையை 3 நாட்களுக்குள் எடுத்திருக்க வேண்டும்.

* சோதனை முடிவை www.newdelhiairport.in என்ற தளத்தில் அப்லோட் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News