செய்திகள்
கலெக்டர் விஷ்ணு

நெல்லை மாவட்டத்தில் 449 துணை வாக்குச்சாவடிகள் அமைப்பு- கலெக்டர் விஷ்ணு தகவல்

Published On 2021-02-24 10:27 GMT   |   Update On 2021-02-24 10:27 GMT
நெல்லை மாவட்டத்தில் 449 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 1050-க்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்குமாறு தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 449 வாக்குச்சாவடிகளில் 1050-க்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதாவது, நெல்லை தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 100 துணை வாக்குச்சாவடிகளுடன் சேர்த்து 408 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் அம்பை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும், 62 துணை வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், 121 துணை வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், 96 துணை வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், 70 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,475 வாக்குச்சாவடிகளும், 449 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. துணை வாக்குச்சாவடிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து சட்டமன்ற தொகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனையின் பேரில் பிரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, கணேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News