செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

Published On 2021-02-24 07:16 GMT   |   Update On 2021-02-24 07:16 GMT
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,336-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்தபடி இருந்தது. இந்த நிலையில் இன்னும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 336-க்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 417 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.

Tags:    

Similar News