செய்திகள்
கோப்புப்படம்

நெகமம் அருகே அ.தி.மு.க. எம்.பி. உறவினர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை

Published On 2021-02-23 18:12 GMT   |   Update On 2021-02-23 18:12 GMT
நெகமம் அருகே அ.தி.மு.க. எம்.பி. உறவினர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த தோட்ட வேலைக் காரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெகமம்:

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த கப்பிணிபாளையத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 61), விவசாயி. இவருடைய மனைவி ஜமுனா வயது 60. இவர்கள் அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருகிறார்கள். ராமராஜ், அ.தி.மு.க. எம்.பி.யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இவர்களின் தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள தென்கரை பகுதியை சேர்ந்த சச்சின் (40) என்பவர் தோட்ட வேலைக்காக சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமராஜ் அவரது மனைவி ஜமுனா ஆகியோர் கோவை அருகே இடிகரையில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

மேலும் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம், வைர நகைகள் மற்றும் ஒரு ஜோடி கம்மல் ஆகியவை திருடப் பட்டு இருந்தது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரையும் காணவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தோட்டத்து சாலையில் தங்கி இருந்த சச்சினை தேடியபோது அவரை காணவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடினார்கள். அவரை காணவில்லை. தலைமறைவானது தெரியவந்தது.

அப்போது ராமராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டர் நெகமம் பஸ்நிலையத்தில் இருந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், தோட்ட வேலைக்காரரான சச்சின், ராமராஜ் வீட்டில் நகை, பணத்தை திருடிவிட்டு ஸ்கூட்டரை பஸ்நிலையத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. எனவே அ வரை ே பாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News