செய்திகள்
விமான சேவை

மார்ச் 28-ந்தேதி முதல் திருச்சி-புதுடெல்லி இடையே மீண்டும் நேரடி விமான சேவை

Published On 2021-02-21 18:18 GMT   |   Update On 2021-02-21 18:18 GMT
திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடா்ந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் இயக்கப்படும் இந்த விமானம் திருச்சியில் இருந்து தினமும் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக மதியம் 12.45 மணிக்கு புதுடெல்லியை சென்றடையும். பின்னர் புதுடெல்லியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்.
Tags:    

Similar News