செய்திகள்
ராஜ்நாத் சிங்

அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெறும்- ராஜ்நாத் சிங்

Published On 2021-02-21 12:15 GMT   |   Update On 2021-02-21 12:15 GMT
அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
சேலம்:

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணிதேசிய தலைவர் தேஜஸ்விசூர்யா வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது, 

அதிமுக பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்படுள்ளது. 

நாட்டினை நிர்மாணிப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. பங்கு சந்தையும் வேகமாக வளர்கிறது. 

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. சேலம்- சென்னை விரைவு சாலை திட்டப்பணிகள் 2021- 22-ல் தொடங்கப்படும். 

இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News