செய்திகள்
கைது

சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு- 5 பேர் கைது

Published On 2021-02-20 09:52 GMT   |   Update On 2021-02-20 09:52 GMT
திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர்:

திருச்சியை அடுத்துள்ள அரியமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் மனைவி லட்சுமி (வயது 54). இவர் தனது பெயரை புதுக்கோட்டை மாவட்டம் மேலபச்சைக்கொடி பிரேமானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி துர்காதேவி என மாற்றினார்.

பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக நேற்று காலை திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சேதுராப்பட்டியிலுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை பதிவு செய்வதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அவரது ஆவணங்களை மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவி மங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் பார்த்திபன் தயார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆவணங்களில் சார்பதிவாளருக்கு முன்பாக கையொப்பமிடும்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடனே சார் பதிவாளர் பொறுப்பு உடனடியாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது சம்பந்தமாக கீழ பஞ்சப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த ஆள் மாறாட்டம் குறித்து ராஜசேகர், பார்த்திபன், பாஸ்கர், ஆறுமுகம், லட்சுமி ஆகிய 5 பேரையும் கைது செய்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவான ஆரோக்கியசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News