செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2021-02-18 06:56 GMT   |   Update On 2021-02-18 06:56 GMT
அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

* அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது.

* அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக உள்ளது என்பது உண்மையில்லை.

* புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News