செய்திகள்
தமிழக அரசு

சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

Published On 2021-02-17 18:27 GMT   |   Update On 2021-02-18 01:13 GMT
தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். சட்டசபை தேர்தலையொட்டி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று இரவு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1.கணேசமூர்த்தி-பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

2.டி.எஸ்.அன்பு- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், நெல்லை நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.

3. தீபக் எம்.தாமோர்- நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த இவர், சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. வித்யா ஜெயந்த் குல்கர்னி- சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக பணிபுரிந்த இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

5. தேன்மொழி- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியில் இருந்த இவர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

6. கே.சங்கர்- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. பவானீஸ்வரி- சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்பார்.

8. டாக்டர் என்.கண்ணன்- சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரான இவர், சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

9. ஆர்.தினகரன்- சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

10.கே.பெரியய்யா- மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11.சந்தோஷ்குமார்- சென்னை நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், சேலம் நகர கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

12.டி.செந்தில்குமார்- சேலம் நகர கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13.அருண்-சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர், நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

14. எஸ்.ராஜேஸ்வரி- சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

15.சி.மகேஸ்வரி-சென்னை மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பணியாற்றிய இவர், தலைமையக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

16. பி.கே.செந்தில்குமாரி- சென்னை தலைமையக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

17. எஸ்.லட்சுமி-சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

18.ஏ.ஜி.பாபு- சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக இருந்த இவர், சென்னை நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

19. ஏ.டி.துரைகுமார்- சென்னை நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. வி.பாலகிருஷ்ணன்-சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனரான இவர், சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21.ஆர்.சுதாகர்-சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனரான இவர், மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

22.எஸ்.ராஜேந்திரன்- மதுரை சரக டி.ஐ.ஜி.யான இவர், மாநில உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

23. எம்.பாண்டியன்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

24. கே.எழிலரசன்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

25. ஆர்.கிருஷ்ணராஜ்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த இவர், நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. எம்.மணிவண்ணன்- நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. எஸ்.ஜெயக்குமார்-தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல் படை கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. வி.பாஸ்கரன்- சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல் படை கமாண்டராக பணியாற்றிய இவர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

29. வி.ஆர்.ஸ்ரீனிவாசன்-அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. எஸ்.சரவணன்-நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக பதவி ஏற்பார்.

31. ஆர்.ராமகிருஷ்ணன்- தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக பணியாற்றிய இவர், சென்னை ஐகோர்ட்டு வழக்குகள் பிரிவு உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

32. மயில்வாகனன்- ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், கோவை நகர தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

33. கே.குணசேகரன்- கோவை நகர தலைமையக துணை கமிஷனராக இருந்த இவர், அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

34. டாக்டர் ஆர்.சிவகுமார்-சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக இருந்த இவர், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. பாண்டியராஜன்-சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

36. சசிமோகன்- நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. அதிவீரபாண்டியன்- சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

38. ராஜசேகரன்-சென்னை தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

39. பழனிகுமார்- மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

40. பி.ராஜன்- சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், திருச்சி மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

41. ஜெயச்சந்திரன்- திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

42. ராஜராஜன்- மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

43. ரோகித்நாதன் ராஜகோபால்- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

44. அசோக்குமார்- சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை மிதக்கும் காவல் படை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

45. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- சென்னை மிதக்கும் காவல் படை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

46. பி.பகலவன்- கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

47.மகேஷ்- கியூ பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

48. தீபா சத்யன்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

49. என்.குமார்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

50. வந்திதா பாண்டே-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

51. கே.மீனா- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

52. பி.கண்ணம்மாள்- சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், கியூ பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

53. ஏ.சுந்தரவதனம்-மாமல்லபுரம் உதவி சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

54. டி.சங்கரன்- சென்னை போலீஸ் அகாடமி கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 



Tags:    

Similar News