செய்திகள்
சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டணம் போதிய இருப்பு இல்லாததால் அரசு பஸ் நிறுத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

‘பாஸ்டேக்’ கட்டாயம் எதிரொலி: கயத்தாறு சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் - பயணிகள் கடும் அவதி

Published On 2021-02-17 15:47 GMT   |   Update On 2021-02-17 15:47 GMT
பாஸ்டேக் கட்டாயம் எதிரொலியாக கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
கயத்தாறு:

கயத்தாறு சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் பாஸ்டேக் கட்டணம் முறை கட்டாயம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பாஸ்டேக் கட்டணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்த வண்ணம் இருந்தது. இதனால் வாகனங்களில் வந்த பலர் காலதாமதமாக சென்றதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே, சுங்கச்சாவடியில் தனியார் கம்பெனிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சில வாகன ஓட்டிகள் அந்த ஸ்டிக்கர்களை வாங்கிச் சென்றனர்.

நெல்லையில் இருந்து கோவை, மதுரை சென்ற 2 அரசு பஸ்களில் பாஸ்டேக் கட்டணம் போதிய இருப்பு இல்லாததால், அவை தடுத்து நிறுத்தப்பட்டன. சுங்கச்சாவடி அதிகாரிகளிடம், போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பஸ்கள் புறப்பட்டு சென்றன. சுமார் 20 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டதால், பஸ்களில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News