செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு வேலை- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2021-02-16 02:40 GMT   |   Update On 2021-02-16 02:40 GMT
ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிதாக தொடங்கப்பட்டுள்ள புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 திருநங்கை சகோதரிகளின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின் அரசு என்றும் துணைநிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News