செய்திகள்
எல்.முருகன்

இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி- எல்.முருகன்

Published On 2021-02-15 10:01 GMT   |   Update On 2021-02-15 10:01 GMT
இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி என்று பா.ஜனதா மாநில தலைவர் முருகன் கூறினார்.
கோவை:

1998-ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிரான போட்டி.இந்து மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க.உள்ளது. கருப்பர் கூட்டம் உள்ளிட்டவற்றை தி.மு.க.தான் இயக்குகிறது. இந்து ஒற்றுமை, இந்து கடவுளை அவமதிப்பவர்களை தி.மு.க ஆதரிக்கிறது. வெற்றிவேல் யாத்திரை தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை அளித்தது. தி.மு.க.வினர் வேல் தூக்குவதன் மூலம் இதனை தெரிந்து கொள்ளலாம்.

இந்துக்களை அவமதித்து பேசும் திருமாவளவன் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதபோது, கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. கோவை குண்டுவெடிப்பில் 58 பேர் மரணம் அடைந்தது, 250 பேர் காயமடைந்தது வீணாக போக கூடாது என்றால் தி.மு.க வை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் உள்ள இந்து தர்ம அமைப்பின் மாநில தலைவர் சசிகலா டீச்சர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முருகனையும், கேரளாவில் அய்யப்பனையும் வழிபடுகிறார்கள். இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதம் இந்துக்களின் வீட்டு அடுக்களை வரை வந்துவிட்டது. இதனை தடுக்க வேண்டும். இந்து ஒற்றுமை ஓங்க வேண்டும். லவ் ஜிகாத் முறை பெருகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News