செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.65 அடியாக சரிந்தது

Published On 2021-02-14 07:49 GMT   |   Update On 2021-02-14 07:49 GMT
மேட்டூர் அணைக்கு நீர் வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 104.65 அடியாக சரிந்தது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைத்துள்ளது. நேற்று விநாடிக்கு 79 கன அடி தண்ணீர் வந்தது. இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 91 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் நேற்று 104.76 அடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 104.65 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News