செய்திகள்
அதிகாரிகள் ஆய்வு செய்த போது

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரெயில் - தலைவர் ஆய்வு

Published On 2021-02-13 20:31 GMT   |   Update On 2021-02-13 20:31 GMT
வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைவருமான துர்கா சங்கர் மிஸ்ரா வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, விம்கோ நகர் மற்றும் புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளபல்வேறு ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதிய வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கிய பின்னர் பயணிகளின் நலனுக்காக செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின் போது, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், இயக்குனர்கள் சுஜாதா ஜெயராஜ், ராஜீவ் நாராயண் திவேதி, ராஜேஷ் சதுர்வேதி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

முன்னதாக சென்னை சீர்மிகு நகர (ஸ்மார்ட்சிட்டி) திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தார். ரிப்பன் மாளிகையில் உள்ள இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு மாநகர கமிஷனர் கோ.பிரகாஷ் விளக்கினார். பின்னர் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசினார்.
Tags:    

Similar News