செய்திகள்
கோப்புபடம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சாலை மறியல் - 30 பெண்கள் உள்பட 110 பேர் கைது

Published On 2021-02-13 14:23 GMT   |   Update On 2021-02-13 14:23 GMT
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:

ரேஷன் கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும். பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடந்தது.

மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், நிர்வாகிகள் பாண்டியன், அறிவழகன், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News