செய்திகள்
ரெயில்வே மேம்பாலத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

திருவாரூரில், மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது

Published On 2021-02-07 11:48 GMT   |   Update On 2021-02-07 11:48 GMT
வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கேட்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், பவுன்ராஜ் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் பழனிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றியசெயலாளர் புலிகேசி, மீனவர் சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி, மக்கள் அதிகாரம் நிர்வாகி சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தினால் தஞ்சை- நாகை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து திருவாரூர் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே கான்கிரீட் சுவர் எழுப்பி, ஆனி கம்பளம் விரித்துள்ள மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மன்னார்குடி கீழப்பாலத்தில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, நகர செயலாளர் வி.கலைச்செல்வன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். போராட்டக்காரர்களை அடக்குமுறை கொண்டு வெளியேற்றும் போக்கை கைவிட வேண்டும். வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருவாரூரில் டிராக்டர் பேரணி சென்றவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நீடாமங்கலம் ஒன்றியசெயலாளர் ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி விவசாயிகள் சங்க நிர்வாகி ராவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றியசெயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாரதிமோகன், கந்தசாமி, பூசாந்திரம், காங்கிரஸ் நிர்வாகிகள் கோவிந்தராஜ், பத்மநாபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தால் நீடாமங்கலத்தில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் வரை செல்லும் பஸ்கள், லாரிகள்

நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் கழித்து கலைந்து ெசன்றனர்.

குடவாசலில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு் கட்சி நகர செயலாளர் நமசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இன்பநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் கும்பகோணம்- திருவாரூர் சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கோட்டூரில் விவசாய சங்கங்களின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சவுந்தரராஜன், கோட்டூர் ஒன்றிய தலைவர் அறிவுடைநம்பி, ஒன்றிய செயலாளர் பரந்தாமன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமன், ஒன்றிய தலைவர் சிவசண்முகம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News