செய்திகள்
ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்த முதல்வர்

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைப்பீர்கள்? -ஐகோர்ட் கேள்வி

Published On 2021-02-04 10:02 GMT   |   Update On 2021-02-04 10:02 GMT
அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். 

‘இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப்போகிறீர்கள்? ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய தமிழக அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. நீதித்துறைக்குப் பல நீதிபதிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு சிலை வைக்க நீதிமன்றத்தில் அனுமதியில்லை' எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News