செய்திகள்
கீழடியில் அகழாய்வு

கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அகழ்வைப்பகத்தில் காட்சிபடுத்தப்படும்- கவர்னர் உரை

Published On 2021-02-02 10:29 GMT   |   Update On 2021-02-02 10:29 GMT
கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அகழ்வைப்பகத்தில் காட்சிபடுத்தப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் உரையில் கூறியதாவது:

நம் தாய்த் தமிழ்மொழியின் பெருமையை வளர்ப்பது இந்த அரசின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் மொழி பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடியவர்களின் முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், எல்லைக் காவலர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 4,500 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 3,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும், அவர்களின் உதவித்தொகை 2,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

கீழடி அகழ்வாராய்ச்சியில், சங்ககாலப் பண்பாட்டின் செழுமையான தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த முக்கிய தொல்பொருட்கள் தற்போது தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

இதுவரை சொற்குவை வலைதளத்தில் 3,85,788 சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மாநில ஆட்சிமொழி (சட்டம் இயற்றும்) ஆணையம், 38 மத்தியச் சட்டங்களை தமிழில் மொழியாக்கம் செய்ததுடன், இதுவரை 1000-க்கும் மேற்பட்ட சொற்களைத் தொகுத்து தமிழில் ஒரு சட்ட அகராதியைத் தயாரித்து வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News