செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் சேவை இம்மாத இறுதியில் மோடி தொடங்கிவைப்பார்

Published On 2021-02-02 09:26 GMT   |   Update On 2021-02-02 09:26 GMT
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1ன் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில்:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1ன் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சரால் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை வழங்குகின்றன.

இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு 50-50 பகிர்வு அடிப்படையில் மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை வழங்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News