செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

அனைவருக்கும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும்- கவர்னர் உரை

Published On 2021-02-02 06:36 GMT   |   Update On 2021-02-02 06:36 GMT
அனைவருக்கும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:

* ஆர்டிபிசிஆர் சோதனை முறையாக கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழகம்.

* தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தொடரும்.

* அனைவருக்கும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

* தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பதே இந்த அரசின் முதன்மை குறிக்கோளாக உள்ளது.

* பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கிய கோட்பாடாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News