டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 28, 2021 19:42
கோப்புபடம்
தூத்துக்குடி:
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ம.தி.மு.க. நக்கீரன், மகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாத்துரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜாய்சன் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.