செய்திகள்
ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் தென்னக பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்

போதிய நிதி இல்லாத காரணத்தால் திண்டிவனம்-நகரி ெரயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

Published On 2021-01-28 12:29 GMT   |   Update On 2021-01-28 12:29 GMT
போதுமான நிதி இல்லாத காரணத்தால் திண்டிவனம்- நகரி ரெயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு முதல் ராணிப்பேட்டை ரெயில் நிலையம் வரை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் நேற்று மாலையில் ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காரணமாக சில மாதங்கள் காலதாமதமாக இந்த ஆய்வு நடைபெறுகிறது. ராணிப்பேட்டையில் இருந்து சரக்கு போக்குவரத்து ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள தொழிற்சாலைகள் பயன் பெறும். சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையினால் எதிர்காலத்தில் ெரயில்வேத் துறைக்கு வருவாய் அதிகரிக்கும்.

திண்டிவனம் முதல் நகரி வரையிலான ரெயில் போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல திட்டங்கள் தொடகப்பட்டிருந்த போதிலும் போதிய நிதி இல்லாத காரணத்தினால், தற்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

ராணிப்பேட்டை முதல் சென்னை வரையிலான பயணிகள் ரெயில் சேவைக்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை. பின்னர் இது குறித்து பரீசலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பல்வேறு ரெயில் பயணிகள் நலக்குழுவின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து பரீசலிக்கப்படும் என்றார். ரெயில்வேத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக அரக்கோணம் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் கட்டப்பட்ட புதிய பயணச்சீட்டு அலுவலகம், நடைமேம்பாலம், ரெயில் ஒட்டுனர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகம், ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாருக்கான தங்கும் விடுதி உள்ளிட்டவைகளை திறந்து வைத்து பேசினார்.

அப்போது வருகிற ஜூலை மாதத்தில் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக ரேணிகுண்டாவுக்கு மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக காட்பாடி வழியாக பெங்களூரூ வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. பயணிகள் ரெயில்கள், ரெயில்வே வாரியத்தின் உத்தரவு கிடைத்தபின் படிப்படியாக இயக்கப்படும். அதுவரை சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படும். ஆண் பயணிகளை அனைத்து நேரங்களிலும் மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து பரிசிலிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் புளியமங்கலம் மின்சார ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிமனையில் சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News