செய்திகள்
அறுவடை செய்யப்பட்ட நெல்

கும்பகோணம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2021-01-28 08:55 GMT   |   Update On 2021-01-28 08:55 GMT
கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்களை உலர வைக்க இடம் கிடைக்காமல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உலர வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நாற்று நடவு செய்து தற்போது அனைத்து நெற்பயிர்களிலும் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக பயிர்கள் சாய்ந்துள்ள நிலையில் அறுவடை செய்யவேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்ய தொடங்கி விட்டனர்.

தற்போது எந்திர தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். ஒரு சிலர் கிடைத்த அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால், அதனை உலரவைக்க இடமில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு டிராக்டர் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அந்தந்த பகுதிகளில் உலர வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், உலர வைக்கப்பட்டு மூட்டைகளாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News