செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-28 02:57 GMT   |   Update On 2021-01-28 02:57 GMT
தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 179 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 17 ஆயிரத்து 900 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்புமருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 7 ஆயிரத்து 885 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்புமருந்தும், 201 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்புமருந்தும் என மொத்தம் 8 ஆயிரத்து 86 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 138 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஆயிரத்து 901 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசியும், ஆக, 82 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News