செய்திகள்
வைகோ

வைகோ 12-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

Published On 2021-01-28 02:17 GMT   |   Update On 2021-01-28 02:17 GMT
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெறுவதற்காக 12-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னை:

ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெறுவதற்காக சுற்றுப்பயணம் செய்கிறார்.

வரும் பிப்ரவரி 12-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை.

14-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, 15-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், 16-ந்தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், 17-ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், 18-ந்தேதி விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் நிதி திரட்டுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News