செய்திகள்
த.மா.கா. சார்பில் காந்தி நகரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்ட போது எடுத்தபடம்.

திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2021-01-27 22:30 GMT   |   Update On 2021-01-27 22:30 GMT
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
அனுப்பர்பாளையம்:

திருப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் பி.என்.ரோடு அண்ணாநகரை அடுத்த ஜி.என்.ஜெயலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் சுதாமோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி வரவேற்றார். இதில் பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றி, இனிப்பு வழங்கினார். விழாவில் ஆசிரிய-ஆசிரியைகள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.



திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவுக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றினார். கல்லூரி முதல்வர் முத்துசாமி வரவேற்றார். விழாவையொட்டி தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சில நிகழ்ச்சிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்றது. முடிவில் நிர்வாக அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.

திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தலைவர் மோகன் கே.கார்த்திக், இயக்குனர் கே.ரமேஷ் ஆகியோர் தேசிய கொடியேற்றிவைத்து பேசினார்கள்.

விழாவில் பள்ளி முதல்வர் நிவேதிகா ஸ்ரீராம் வரவேற்று பேசினார். நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் நன்றி கூறினார். பள்ளி தாளாளர் வினோதினி கார்த்திக் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் குடியரசு தினவிழா காந்தி நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கட்சி மூத்த உறுப்பினர் ஜெயா முத்துச்சாமி தேசிய கொடி ஏற்றினார். நாமக்கல் மாவட்ட தலைவர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாநகர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் தனசேகரன், பொது செயலாளர்கள் ஞானவேல், பெரியசாமி, அபுல்கலாம் ஆசாத், செயலாளர்கள் தங்கராஜ், முருகேசன், ரகுநாதன், இளைஞரணி ஹரி, வர்த்தக அணி தவமணி, பாபு, மகளிரணி ஷர்மிளா, மண்டல தலைவர்கள் சுப்பிரமணி, செந்தில், ராஜகோபால், ஆபீஸ் ராஜ் உள்பட மாவட்ட, மண்டல, டிவிஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேவூர் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள செந்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் முத்துசாமி தேசிய கொடியேற்றி குடியரசு இந்தியாவில் மாணவர்களின் பங்கு பற்றி பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருண்ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News