செய்திகள்
முத்தரசன்

தமிழகத்தில் 3வது அணிக்கு சாத்தியமில்லை- முத்தரசன் பேட்டி

Published On 2021-01-27 01:55 GMT   |   Update On 2021-01-27 01:55 GMT
தமிழகத்தில் 3-வது அணி என்பது சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சேலம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியரசு சட்டம் நம்மை வழி நடத்துகிறது என்று பிரதமர் கூறி வரும் நிலையில், இச்சட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து உள்ளார். சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 3-வது அணி என்பது சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்பது முக்கியமில்லை. பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்றவிடக் கூடாது என்ற எண்ணம் தான் உள்ளது.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Tags:    

Similar News