நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
பதிவு: ஜனவரி 26, 2021 20:20
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 32-வது வார்டு ராவுத்தர் கீழத்தெருவில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் புகாரி சேக் தலைமையில், மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.