செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழகத்தில் கூடுதலாக 23 ஆயிரம் வாக்குச்சாவடிகள்- கவர்னர் பன்வாரிலால் தகவல்

Published On 2021-01-26 06:16 GMT   |   Update On 2021-01-26 06:16 GMT
கொரோனாவால் சமூக இடைவெளியை கடைபிடிக்க தமிழகத்தில் கூடுதலாக 23 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

தமிழகத்தில் வருகிற தேர்தலில் கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கூடுதலாக 23 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே 67,775 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1000 வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்படுகிறது.

தற்போது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமி‌ஷனர் அறிமுகப்படுத்தி உள்ளது. அனைத்து குடிமகன்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிப்பது நமது உரிமை, கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News