பாலக்கோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு அருகே வாலிபர் தற்கொலை
பதிவு: ஜனவரி 25, 2021 10:17
தற்கொலை
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் கவுரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் (வயது 26). இவர் பாலக்கோட்டில் செல்போன் கடை நடத்தி
வந்தார். இவர், உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய அவரது பெற்றோரிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள், பெண் கொடுக்க மறுத்து வேறு
ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.