செய்திகள்
இன்று பகல் நேரத்தில் ஏரியில் படகு சவாரி மேற்கொண்ட சுற்றுலா பயணிகள்.

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-01-24 22:25 GMT   |   Update On 2021-01-24 22:25 GMT
வார விடுமுறையைெயாட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கொட்டிக்கிடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வார விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் குவிந்்தனர். இதன் காரணமாக நகரிலுள்ள பல்வேறு தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அங்கு பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில், பச்சைக்கம்பளம் விரித்தாற்போல காட்சி அளிக்கும் புல்வெளியில் அமர்ந்து பொழுதை போக்கினர்.

இதேபோல் கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி, பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சு வீடு அருவி ஆகியவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பமும் அதனை தொடர்ந்து மாலை முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவியது.
Tags:    

Similar News