செய்திகள்
கனிமொழி

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது- கனிமொழி குற்றச்சாட்டு

Published On 2021-01-24 08:32 GMT   |   Update On 2021-01-24 08:32 GMT
சமூக வலைதளங்களை பயன்படுத்தி அ.தி.மு.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம்:

தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்களாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

தனுஷ்கோடியில் பிரசாரத்தை தொடங்கினர். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மண்டபம் அருகே வேதாளையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரட்டையூரணியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கூட்டம் பட்டினம்காத்தானில் நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் நகரில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், ரேசன் கடைகளில் மக்களுக்கு தரமான அரசி வழங்கப்படுவதில்லை. பெண்களுக்கும், மீனவர் களுக்கும் பாதுகாப்பற்ற நிலை இருப்பதை காண முடிகிறது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அ.தி.மு.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல. தேவையான இடங்களில் சாலை வசதியில்லை. ஆனால், தேவையற்ற இடங்களில் எட்டுவழி சாலை அமைக்கப்படுகிறது. குடிமராமத்து பணியும் முழுமையாக நடைபெறவில்லை என்றார்.

ராமநாதபுரம் அரண்மனை அருகே வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

தேவிபட்டினம், தொண்டி, திருவாடானை பகுதிகளிலும் பிரசாரம் செய்தார்.

Tags:    

Similar News