செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2021-01-23 18:15 GMT   |   Update On 2021-01-23 18:15 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சமீபகாலமாக பயணிகள் போர்வையில் வியாபாரிகளும், குருவிகளும் (கடத்தல்காரர்கள்) தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.அவற்றை சோதனை நடத்தி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டி என்ற பயணி 158 கிராம் தங்கத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த துரைசாமி 188 கிராம் தங்கத்தையும், பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் 168 கிராம் தங்கத்தையும், கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, திருச்சியை சேர்ந்த நாகராஜ் என்ற பயணி 187 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 701 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பயணிகளிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News